மக்களுடன் முதல்வர்!
ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 11) தருமபுரியில் தொடங்கி வைக்கிறார்.
அழகு முத்துக்கோன் பிறந்தநாள்!
சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை ஒட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
நீட் தேர்வு வழக்கு!
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
எடப்பாடி ஆலோசனை!
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றம் முன்பாக நீலம் சட்ட மையம், சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நடராஜர் கோவில் தேரோட்டம்!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆனி திருமஞ்சன தேரோட்டம் நடைபெற உள்ளது.
அமெரிக்கா – உருகுவே மோதல்!
கோபா அமெரிக்கா கால்பந்து அரையிறுதி போட்டியில் அமெரிக்கா – உருகுவே அணிகள் இன்று மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 116-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜெர்மனி – நார்வே மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஜெர்மனி – நார்வே அணிகள் மோதுகின்றன.
டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி இடைத் தேர்தல் எக்சிட் போல்… யாருக்கு எவ்வளவு ஓட்டு??
கிச்சன் கீர்த்தனா : மக்னா மலாய் கறி
ஹெல்த் டிப்ஸ்: உடல் எடையை வேகமாகக் குறைக்க நினைப்பவரா நீங்கள்? எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்!