டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news today January 27 2024

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்! top ten news today January 27 2024

முதலீடுகளை ஈர்ப்பதற்காக சுவீடன், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு  முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 27) பயணம் செய்கிறார்.

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்!

மகாத்மா காந்தியின் விடுதலை போராட்ட பங்களிப்பை ஆளுநர் ரவி கொச்சைப்படுத்தியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

பவதாரிணி இறுதிச்சடங்கு!

மறைந்த பாடகி பவதாரிணியின் உடல் தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இசை சங்கம் நிகழ்ச்சி!

சென்னை கலைவாணர் அரங்கில் கலைஞர் நூற்றாண்டு மற்றும் பொங்கல் விழா இசை சங்கமம் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

கங்குவா அப்டேட்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகிறது.

வள்ளலார் திருஅறை தரிசனம்!

வடலூர் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் இன்று மதியம் 12 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.

டிடிவி தினகரன் ஆலோசனை!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

கேலோ இந்தியா சைக்ளிங்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை கேலோ இந்தியா சைக்ளிங் போட்டி நடைபெறுவதால், அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 615-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சேமியா கருப்பட்டி லட்டு

ப்ளுஸ்டார் வெற்றி: சாந்தனு உருக்கம்!

அரசியல இது சாதாரணமப்பா : அப்டேட் குமாரு

சாமியாரான தமன்னா: வைரலாகும் புகைப்படங்கள்!

top ten news today January 27 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel