டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர்
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள வாஜ்பாய் ஐஐடி கல்லூரியில் இன்று (செப்டம்பர் 27) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார்.
குஜராத் உச்சி மாநாடு!
குஜராத் உச்சி மாநாட்டின் 20 ஆண்டுகளை கொண்டாடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார்.
பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ச்சி பெற்ற 10,205 தேர்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி!
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட்டை பதிவேற்றம் செய்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள இன்று கடைசி நாள்.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளியூர் செல்ல இன்று 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா மோதல்!
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள்!
சி.பா.ஆதித்தனார் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 494-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி!
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் முகாமிட்டதால் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. யானைகள் இடம்பெயர்ந்ததால் 16 நாட்களுக்கு பிறகு பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் சூப்
‘விஸ்வகர்மா’ திட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம்!
சென்னை – திருப்பதி ரயில் சேவை நாளை முதல் ரத்து!
புதிய தலைமைச் செயலக வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு!