அடிக்கல் நாட்டு விழா!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ரூ.22,600 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 26) அடிக்கல் நாட்டுகிறார்.
மோடியை சந்திக்கும் ஸ்டாலின்
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்கக்கோரி, பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நாளை (செப்டம்பர் 27) மனு அளிக்க உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
திமுக பொதுக்கூட்டம்!
திமுக பவளவிழா ஆண்டின் திராவிடத் தொடர்-2வது நிகழ்ச்சியாக “திராவிட தத்துவம் தீராத இலட்சியம்” என்ற தலைப்பில் சென்னை, ஓட்டேரி, பிரிக்கிளின் சாலை சந்திப்பு, வெங்கட்டம்மாள் சமாதி தெருவில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
தவெக மாநாடு ஆலோசனை!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இந்தநிலையில், மாநாட்டு பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இலங்கை – நியூசிலாந்து மோதல்!
இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று இலங்கையில் உள்ள கல்லே சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 193-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கேட் நுழைவு தேர்வு!
முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
பேராயர் எஸ்றா சற்குணம் நல்லடக்கம்!
உடல்நலக்குறைவு காரணமாக பேராயர் எஸ்றா சற்குணம் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. இன்று வில்லிவாக்கத்தில் உள்ள இசிஐ நம்பிக்கை பேராலயத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: கால் வலியுடன் வாக்கிங் போகலாமா?
கிச்சன் கீர்த்தனா: கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு