டாப் 10 நியூஸ்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் முதல் ‘கேம் சேஞ்சர்’ அப்டேட் வரை!

அரசியல்

ஜம்மு, காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்!

ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று (செப்டம்பர் 25) இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

கர்நாடகா அமைச்சரவை கூட்டம்!

மூடா முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கியது செல்லும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்தநிலையில், சித்தராமையா தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

கலைஞர் கோட்டம் திறப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்!

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மேலும், தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டமும் நடைபெறுகிறது.

பிசிசிஐ ஆலோசனை கூட்டம்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு  வாரியத்தின் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் இன்று மும்பையில் நடைபெறுகிறது.

கேம் சேஞ்சர் அப்டேட்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகிறது.

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 192-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பிளாக் டிரைலர் ரிலீஸ்!

கே.ஜி.பாலமணி இயக்கத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள பிளாக் படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

வானிலை நிலவரம்!

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: டாய்லெட்டில் சிகரெட்டை புகைத்தால்தான் மலம் கழிக்க முடியுமா?

கிச்சன் கீர்த்தனா: நாட்டுக் கதம்ப சாதம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *