அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (செப்டம்பர் 25) நடைபெறுகிறது.
சிறு, குறு தொழிலாளர்கள் போராட்டம்!
மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் சிறு,குறு தொழிலாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் இன்று ஈடுபட உள்ளனர்.
ராணுவ கூட்டு பயிற்சி!
இந்திய அமெரிக்க நாடுகளின் ராணுவ கூட்டு பயிற்சி அலாஸ்காவில் இன்று நடைபெறுகிறது.
ஜெயிலர் பாடல் வீடியோ வெளியீடு!
ஜெயிலர் படத்தின் Hukum பாடல் வீடியோ இன்று வெளியாகிறது.
காங்கிரஸ் கருத்தரங்கம்!
தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் முக்கியத்துவமும் என்ற தலைப்பில் காமராஜர் அரங்கத்தில் இன்று கருத்தரங்கம் நடைபெறுகிறது.
திருப்பதி பிரம்மோற்ச விழா!
திருப்பதி பிரம்மோற்ச விழா 8-ஆம் நாளான இன்று தேர் திருவிழா நடைபெற உள்ளது.
தேசிய புலிகள் ஆணையம் விசாரணை!
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் 10 புலிகள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் தேசிய புலிகள் ஆணையம் இன்று விசாரணை நடத்த உள்ளது.
வணங்கான் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது.
இந்தியா, இலங்கை மோதல்!
சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டி இறுதிப்போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 492-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கிச்சன் கீர்த்தனா: சுண்டைக்காய் பொடிமாஸ்
மாற்றுத்திறனாளிகளுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த ரஜினி ரசிகர்கள்!