மோடி அமெரிக்க பயணம்!
பிரதமர் மோடி தனது மூன்று நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (செப்டம்பர் 24) அமெரிக்காவில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
சித்தராமையா வழக்கில் தீர்ப்பு!
மூடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்ததை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை திமுக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றம்சாட்டி, அதிமுக மகளிரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி!
திமுக பவள விழாவை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் திமுகவில் 75 வயது நிரம்பியவர்களுக்கு அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி மற்றும் நினைவுப் பரிசு வழங்குகிறார்.
யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பு!
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதல்!
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
வானிலை நிலவரம்!
மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 191-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு!
ஹங்கேரியில் நடைபெற்ற 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகம் திரும்பியுள்ள பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலிக்கு சென்னை விமான நிலையத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஓமன் – நேபாள் மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஓமன் – நேபாள் அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: வாழையிலை மடக்கு
தப்ப முயன்ற ரவுடி ஜம்புகேஸ்வரன் சுட்டு பிடிப்பு!