சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு!
சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இன்று (செப்டம்பர் 23) துவக்கி வைக்கிறார்.
கிரிக்கெட் மைதானம் அடிக்கல் நாட்டு விழா!
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குழு ஆலோசனை கூட்டம்!
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறது.
ஈஷா கிராமோத்சவம் திருவிழா!
கோவை ஈஷா மையத்தில் இன்று நடைபெற உள்ள ஈஷா கிராமோத்சவம் திருவிழாவில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
துருவ நட்சத்திரம் அப்டேட்!
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட் இன்று வெளியாகிறது.
மகளிர் தொழில் முனைவோர் பயிற்சி!
மகளிர் தொழில் முனைவோர்களுக்கான இலவச பயிற்சி முகாம் கோவையில் இன்று நடைபெறுகிறது.
ஆசிய விளையாட்டு போட்டி!
19-ஆவது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்காங் நகரில் இன்று துவங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 490-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வங்கதேசம், நியூசிலாந்து மோதல்!
வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூ பொரியல்
ஆய்வறிக்கைகளே முக்கியம்: திட்டக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் வலியுறுத்தல்!