டாப் 10 நியூஸ்: இலங்கை அதிபர் தேர்தல் ரிசல்ட் முதல் தாம்பரம் மின்சார ரயில் ரத்து வரை!

அரசியல்

இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்!

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (செப்டம்பர் 21) நிறைவடைந்த நிலையில், இன்று (செப்டம்பர் 22) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் அனுர குமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்திக்கும் மோடி

அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நியூயார்க்கில் இன்று முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து உரையாட உள்ளார்.

தாம்பரம் ரயில் சேவை ரத்து!

தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – வங்கதேசம் மோதல்!

இந்தியா – வங்கதேசம் அணிகள் ஆடும் நான்காவது நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கம் கோவில் பவித்ரோச் சவம்!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பவித்ரோச்சவத்தை முன்னிட்டு இன்று காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

வானிலை நிலவரம்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 189-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அசோகமித்ரன் பிறந்தநாள்!

தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்ரனின் 93-ஆவது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளது.

உலக நதிகள் தினம்!

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிறு உலக நதிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நதிகளின் முக்கியத்துவத்தையும் அவற்றை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று உலக நதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: சமையலுக்கு ஏற்றது பெரிய வெங்காயமா? சின்ன வெங்காயமா?

இலங்கை அதிபர் தேர்தல் : நள்ளிரவு முதல் முடிவுகள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *