புதிய நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தொடர்!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் 2வது நாள் இன்று (செப்டம்பர் 19) புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.
பருவமழை ஆலோசனை!
வடகிழக்கு முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
காவிரி விவகாரம்!
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் எம்.பிக்கள் குழு இன்று காலை மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளனர். நேற்று சந்திப்பு நடைபெறவிருந்த நிலையில் இன்று சந்திக்க உள்ளனர்.
மகளிர் உரிமைத் தொகை உதவி மையங்கள்!
மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பிப்பவர்கள் இந்த திட்டத்தில் உள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காக இன்று முதல் உதவி மையங்கள் செயல்பட உள்ளன.
விவசாய கடன், பயிர் காப்பீட்டுத் திட்டம்!
விவசாய கடன் மற்றும் பயிர் காப்பீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் விதமாக புதிய திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் இன்று தொடங்கி வைக்க உள்ளனர்.
சூரியனை நோக்கி ஆதித்யா எல்1!
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் ஏவப்பட்ட ஆதித்யா எல்1 பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து இன்று சூரியனை நோக்கிப் பயணிக்க தொடங்கியது.
ஜியோ ஏர்ஃபைபர் அறிமுகம்!
ஜியோ நிறுவனம் தனது வயர்லெஸ் இண்டர்நெட் சேவையான ‘ஜியோ ஏர்ஃபைபரை’ இன்று அறிமுகம் செய்ய உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 486வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விஜய் ஆண்டனி மகள் தற்கொலை!
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார்.
கிச்சன் கீர்த்தனா: சங்குப்பூ டீ
சனாதனமும், மூத்த அமைச்சரும்: இளைஞரணிக் கூட்டத்தில் உதயநிதி சொன்ன சீக்ரெட்!