சிறப்புக் கூட்டத்தொடர்!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (செப்டம்பர் 18) தொடங்கி செப்டம்பர் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
மத்திய அமைச்சரை சந்திக்கும் எம்.பிக்கள்!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து கட்சி எம்.பிக்கள் இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளனர்.
காவிரி மேலாண்மை அவசர கூட்டம்!
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.
இன்று ஆஜராகிறார் சீமான்!
நடிகை விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்ற நிலையிலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று வளசரவாக்கம் காவல் நிலையம் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இன்று சீமான் ஆஜராக உள்ளார்.
மகளிர் உரிமை தொகை விண்ணப்பம்!
மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
விநாயகர் சதுர்த்தி!
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
திருப்பதி பிரம்மோற்சவம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி செப்டம்பர் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 485வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜெயம் ரவியின் 30வது படம்!
நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 30வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.
மகளிர் சமூகத்தின் பொற்காலம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி!
கிச்சன் கீர்த்தனா: டேட்ஸ் பர்ஃபி