திமுக எம்.பிக்கள் கூட்டம்!
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று (செப்டம்பர் 16) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
அமித்ஷா ஆலோசனை!
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஐதராபாத்தில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் ஐதாராபாத்தில் இன்று நடைபெற உள்ளது.
முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.
கோவையில் என்.ஐ.ஏ சோதனை!
கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக கவசம் அவசியம்!
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் புதுச்சேரியில் இன்று முதல் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 483வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனா பிறந்தநாள்!
வெள்ளித் திரை நடிகை மீனா பிறந்தநாள் இன்று.
ஐசிசி உலகக் கோப்பை!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐசிசி உலகக் கோப்பை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இன்றும் நாளையும் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் ரசிகர்களுக்கு உலகக் கோப்பை காட்சிப்படுத்தப்பட உள்ளது.
கிச்சன் கீர்த்தனா: கலப்பு பருப்பு வடை
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எப்போது?