பிரதமர் மோடி பிரச்சாரம்!
வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி ஜம்மு, காஷ்மீரில் முதல்கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 14) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
ஸ்டாலின் சென்னை வருகை!
17 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று புறப்பட்ட நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
அலுவல் மொழி வைரவிழா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று டெல்லியில் நடைபெற உள்ள அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியிலும், 4-வது அகில இந்திய அலுவல் மொழி சம்மேளனத்தின் தொடக்க அமர்விலும் உரையாற்ற உள்ளார்.
குரூப் 2 தேர்வு!
2,327 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வை 7.94 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
ஜிஎஸ்டி குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பிய கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
விஜய் புதிய படம் அப்டேட்!
நடிகர் விஜய் நடிக்கும் 69-வது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகிறது. தமிழக வெற்றி கழகம் கட்சியை ஆரம்பித்து கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய் நடிக்கும் கடைசி படம் இதுவாகும்.
பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 181- ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வச்சி செய்யுதே பாடல் ரிலீஸ்!
எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் பேட்ட ரேப் படத்தில் இடம்பெற்றுள்ள வச்சி செய்யுதே பாடல் இன்று வெளியாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஹைதராபாத் மட்டன் பிரியாணி
ஜிஎஸ்டி பன் வேணுமா? ஜிஎஸ்டி இல்லாத பன் வேணுமா?: அப்டேட் குமாரு