நீதிபதிகள் பதவியேற்பு!
சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ள 5 நீதிபதிகள் இன்று (செப்டம்பர் 14) நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். தலைமை நீதிபதி கங்காபூர்வாலா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
எடப்பாடி டெல்லி பயணம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்ல உள்ளார்.
தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பு!
சிங்கப்பூர் அதிபராக தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்க உள்ளார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் வழக்கு!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
ரயில் டிக்கெட் முன்பதிவு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி பயணிப்பதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்க உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 481வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘ஓ விதி’ பாடல் ரிலீஸ்!
நடிகை த்ரிஷா நடித்துள்ள ‘தி ரோட்’ (the road) படத்தில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள முதல் பாடலான ’ஓ விதி’ இன்று வெளியாக உள்ளது.
‘ரத்தம்’ ஃபர்ஸ்ட் சிங்கிள்!
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ரத்தம் படத்தின் முதல் பாடலான ‘ஒரு நாள்’ இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
ஆசியக் கோப்பை!
ஆசியக் கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோத உள்ளன.
வேலைவாய்ப்பு : தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் பணி!
கிச்சன் கீர்த்தனா: பாதாம் – தேங்காய் பர்ஃபி