கெஜ்ரிவால் வழக்கில் தீர்ப்பு!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 13) தீர்ப்பளிக்கிறது.
நிதின்கட்கரி ஆய்வு!
தமிழகத்திற்கு இன்று வருகை தரும் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, தஞ்சாவூர்- விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்கிறார்.
சபாநாயகர் அப்பாவு வழக்கு!
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் குறித்து சபாநாயகர் அப்பாவு அவதூறாக பேசியதாக, அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் தொடர்ந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
ஓணம் சிறப்பு ரயில்!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கேரளாவுக்கு இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
கொட்டேஷன் கேங் ரிலீஸ்!
விவேக் குமார் இயக்கத்தில் ஷாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னிலியோன் உள்ளிட்டோர் நடித்துள்ள கொட்டேஷன் கேங் படத்தின் முதல் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சி!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்திய கிரிக்கெட் அணி பயிற்சி மேற்கொள்கிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சபரிமலை நடைதிறப்பு!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதல்!
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: நண்டு மசால்
மகாவிஷ்ணு சொற்பொழிவு விவகாரம் : தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!