செயற்குழு கூட்டம்!
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 9) நடைபெறுகிறது.
ராஜ்நாத் சிங் இத்தாலி பயணம்!
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசு முறை பயணமாக இன்று இத்தாலி செல்கிறார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்!
தமிழ்நாடு சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.
திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை!
திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெறுகிறது.
இலவச சட்ட ஆலோசனை மையம்!
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள இலவச சட்ட ஆலோசனை மையத்தை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று திறந்து வைக்கிறார்.
மாமதுர பாடல் ரிலீஸ்!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் X படத்தின் மாமதுர பாடல் இன்று வெளியாகிறது.
மேட்டூர் அணை நீர் திறப்பு நிறுத்தம்!
நீர் மட்டம் குறைந்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு இன்று முதல் நிறுத்தப்படுகிறது.
நியூசிலாந்து, நெதர்லாந்து மோதல்!
இன்றைய ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் 506-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்
கிச்சன் கீர்த்தனா: முளைகட்டிய பயறு சப்ஜி
தெரிஞ்சே இவ்வளவுன்னா தெரியாம..? அப்டேட் குமாரு!
WorldCup 2023: அச்சுறுத்திய ஆஸ்திரேலியா… கூல் வெற்றி பெற்ற இந்தியா