top ten news today in tamil october 8 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

சிக்கிமில் மத்திய அரசு குழு!

சிக்கிமில் மேகவெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் குழு இன்று (அக்டோபர் 8) சிக்கிம் செல்ல உள்ளது.

நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!

காவிரி விவகாரம் தொடர்பாக சென்னை இராஜரத்தினம் திடல் எதிரில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நீர் திறப்பு நிறுத்தம்!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 32 அடியாக குறைந்துவிட்டதால் இன்று அணையில் இருந்து நீர் திறந்துவிடுவதை நிறுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

பழனி ரோப் கார் சேவை!

பழனியில் பராமரிப்பு பணி காரணமாக கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிறுத்தி வைக்கப்பட்ட ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளது.

மின்சார ரயில்கள் ரத்து!

சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு வேளச்சேரி – சிந்தாதிரிப்பேட்டை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

தேசிய விமானப்படை தினம்!

கடந்த 1932 ஆம் ஆண்டு இந்திய விமானப்படை நிறுவப்பட்ட தினமான இன்று நாடு முழுவதும் தேசிய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 505வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐசிசி உலகக் கோப்பை!

ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

கனரா வங்கி சார்பில் இலவச தொழிற்பயிற்சி!

சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு சென்ற லேட்டஸ்ட் ‘மின்சார’ மெசேஜ்! 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *