ரூ.2000 நோட்டு மாற்ற கடைசி நாள்!
ரூ.2000 நோட்டை வங்கிகளில் செலுத்தி மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் (அக்டோபர் 7) நிறைவடைகிறது.
மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது.
அதிமுக வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டம்!
அதிமுக வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
புதுக்கோட்டை அதிமுக ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டை கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவர்கள், பணியாளர்களை நியமிக்க கோரி முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நவராத்திரி பொருட்கள் விற்பனை கண்காட்சி!
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனை கண்காட்சி இன்று முதல் அக்டோபர் 20-ஆம் வரை நடைபெறுகிறது.
சி.விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு!
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்!
இன்றைய ஐசிசி உலக கோப்பை போட்டியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 504-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதான மழை பெய்யக்கூடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கோதுமை தோசை
பிக் பாஸ் வீட்டுக்கும் காலை உணவு போடலாம் சிஎம் சார்: அப்டேட் குமாரு!