தேர்தல் ஆணையம் ஆலோசனை!
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்டோபர் 6) ஆலோசனை நடத்த உள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு வழக்கு!
பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
அதிமுக ஆர்ப்பாட்டம்!
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் அதிமுக ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற உள்ளது.
சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனு!
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிற்கு வரும் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய ஜாமீன் மனு விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
சிறப்புப் பேருந்துகள்!
வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல், விலை!
சென்னையில் இன்று 503வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அயலான் டீசர்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் டீசர் இன்று மாலை 7.08 மணிக்கு வெளியாக உள்ளது.
ரீலிஸாகும் தமிழ் படங்கள்!
தி ரோட், இறுகப்பற்று, 800, மார்கழித் திங்கள், ரத்தம், ஷாட் பூட் த்ரீ, எனக்கு எண்டே கிடையாது, தில் இருந்தா போராடு ஆகிய தமிழ் படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை!
ஐசிசி உலகக் கோப்பை தொடரின் 2வது லீக் போட்டியில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ராகி வெங்காய தோசை
லியோ ட்ரெய்லரில் பிரியா ஆனந்த்..! நோட் பண்ணுங்கப்பா..!