top ten news today october 5 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பிரதமர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 5) ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களுக்கு பயணம் செய்கிறார். ராஜஸ்தானில் ரூ.5000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும், மத்திய பிரதேசத்தில் ரூ.12,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

வள்ளலார் 200-வது பிறந்தநாள் விழா!

சென்னையில் இன்று நடைபெறும் வள்ளலார் 200-வது பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக, பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

கோவை குற்றாலம் குளிக்க அனுமதி!

கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் இன்று முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அசல் மதிப்பெண் சான்றிதழ்!

பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வுகள் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று முதல் தேர்வு மையங்களில் வழங்கப்படுகின்றன.

லியோ ட்ரைலர் ரிலீஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகிறது.

டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு!

காஞ்சிபுரம் அருகே வேகமாக சென்று விபத்துக்குள்ளான டிடிஎஃப் வாசனை செப்டம்பர் 19-ஆம் தேதி காவல்துறை கைது செய்தனர். அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து, நியூசிலாந்து மோதல்!

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: புதினா ஜூஸ்

அரசுப்‌ பள்ளி, கல்லூரி விடுதி மாணவர்களுக்கு உணவுத்தொகை அதிகரிப்பு!

மலைக்கு ‘டெல்லி தண்ணி’ ஒத்துக்கலை: அப்டேட் குமாரு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts