முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்டோபர் 4) 2-ஆவது நாளாக மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்கள் மாநாடு நடைபெறுகிறது.
வேளாண் பல்கலைக்கழகம் சான்றிதழ் சரிபார்ப்பு!
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இணையதள கலந்தாய்வில் கலந்துகொண்டு இடஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறுகின்றன.
பசுபிக் ஆசியா கண்காட்சி!
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் இன்று முதல் அக்டோபர் 6-ஆம் தேதி வரை டெல்லியில் பசுபிக் ஆசியா கண்காட்சியை நடத்துகிறது.
திருப்பூர் குமரன் பிறந்தநாள்!
சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழக அரசு சார்பில் அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
கூகுள் போன்கள்!
கூகுள் நிறுவனத்தின் Pixel 8, Pixel 8 Pro போன்கள் இன்று நியூயார்க்கில் வெளியிடப்பட உள்ளது.
உலக வனவிலங்கு தினம்!
வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் அவசியத்தை வலியுறுத்தி இன்று உலக வன விலங்கு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கனமழை விடுமுறை!
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 501-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செர்பியா, சீனா மோதல்!
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் மியோமிர், சீன வீரர் பு யன்சுகோட் மோதுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மாதுளை லஸ்ஸி
குறுக்கே இந்த கெளசிக் வந்தா… அப்டேட் குமாரு!