மருத்துவ காப்பீடு திட்டம்!
மத்திய அரசின் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 29) தொடங்கி வைக்கிறார்.
புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு!
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ரூ.426.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3,268 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
சபரிமலை நடை திறப்பு!
சித்திரை ஆட்டத்திருநாள் திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை திறக்கப்படுகிறது.
கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை!
சிந்தாதரிப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்த சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை 14 மாதங்களுக்கு பிறகு இன்று வழக்கம் போல் இயக்கப்படுகிறது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று தொடங்குகிறது. இதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
ராகவா லாரன்ஸ் 25-ஆவது படம்!
ரமேஷ் வர்மா இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அவரது 25-ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.
சீமான் ஆலோசனை!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக இன்று தேனி மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
உகாண்டா, பஹ்ரைன் மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் உகாண்டா, பஹ்ரைன் அணிகள் மோதுகின்றன.
வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 226-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
விஜய் மாநாட்டில் கவனம் ஈர்த்த தொகுப்பாளினி: யார் இவர்?