டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top ten news today in tamil october 16 2023

ராகுல் காந்தி நடைபயணம்!

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மிசோரம் மாநிலத்தில் ராகுல் காந்தி இன்று (அக்டோபர் 16) நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். சன்மாரி – கருவூல சதுக்கம் வரை 2 கி.மீ தூரம் நடந்து சென்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்கிறார்.

அண்ணாமலை நடைபயணம்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் 3வது கட்ட ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் அவிநாசியில் இன்று தொடங்குகிறது.

மதிமுக ஆர்ப்பாட்டம்!

காவிரி பிரச்சினை மற்றும் நூறு நாள் வேலை திட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் திருச்சியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோர் இன்று பதவியேற்க உள்ளனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்!

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 224வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சேலம் விமான சேவை!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் பயணியர் விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 513வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அனிருத் பிறந்தநாள்!

தமிழ் திரைத்துறையில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் பிறந்தநாள் இன்று.

ஐசிசி உலகக் கோப்பை!

ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள 14வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் மோத உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மக்ரோனி சூப்

’ஏங்க.… அவங்க நம்ம பங்காளிங்க’ : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment