டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news today in tamil october 15 2023

வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (அக்டோபர் 15) வெளியாகிறது.

சைக்கிள் பேரணி!

சென்னை கானத்தூர் – மாமல்லபுரம் வரை இன்று நடைபெறும் சைக்கிள் பேரணியில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

கல்வி கடன் மேளா!

சேலம் மாவட்டத்தில் உள்ள சோனா தொழில்நுட்ப கல்லூரியில் இன்று கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ரயில் சேவை ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் செல்லும் ரயில்கள் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2.15 மணி வரை ரத்து செய்யப்படுகிறது.

அப்துல் கலாம் பிறந்தநாள்!

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி பெருவிழா!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் இன்று முதல் அக்டோபர் 24-ஆம் தேதி வரை நவராத்திரி பெருவிழா நடைபெறுகிறது.

தசரா திருவிழா!

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 512-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மோதல்!

இன்றைய ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

டொவினோ தாமஸா இது?: ரசிகர்கள் ஷாக்!

ஜிகர்தண்டா 2 படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட்..!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel