ஒலிம்பிக் குழு கூட்டம்!
141-வது சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தை மும்பையில் இன்று (அக்டோபர் 14) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
மகளிர் உரிமை மாநாடு!
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை!
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
மார்க் ஆண்டனி பாடல் வெளியீடு!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்த மார்க் ஆண்டனி படம் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியான நிலையில் அப்படத்தில் இடம்பெற்ற ஐ லவ் யூ டி வீடியோ பாடல் இன்று வெளியாகிறது.
வேலைவாய்ப்பு முகாம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சிறப்பு பேருந்துகள்!
மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான் மோதல்!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 511-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மிதிவண்டி போட்டி!
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரத்தில் இன்று மிதிவண்டி போட்டிகள் நடைபெற உள்ளது.
வானிலை நிலவரம்!
தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
கிச்சன் கீர்த்தனா: பாம்பே கார டோஸ்ட்
படப்பிடிப்பு தளத்தில் விஷாலுக்கு பரிசளித்த யோகி பாபு