டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news today october 12 2023

விளையாட்டு வீரர்களுடன் ஸ்டாலின் சந்திப்பு!

ஆசிய போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களை முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 12) சந்தித்து ஊக்கத்தொகை வழங்குகிறார்.

வரையாடு திட்டம்!

தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடுகளை பாதுகாப்பதற்காக வரையாடு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

போடி மெட்டு – மூணாறு சாலை திறப்பு!

போடி மெட்டு – மூணாறு சாலையை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று திறந்து வைக்கிறார்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை பயிற்சி!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பங்களை மறு பரிசீலனை செய்வது தொடர்பான பயிற்சி துணை ஆட்சியர்கள், கோட்டாட்சியர்களுக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெறுகிறது.

மின்சார ரயில்கள் ரத்து!

சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.

அதிமுக ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

புத்தக கண்காட்சி!

மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று முதல் அக்டோபர் 22-ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.

வட சென்னை மறு திரையிடல்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வட சென்னை திரைப்படம் இன்று முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரை சென்னை கமலா திரையரங்கில் மாலை மற்றும் இரவு காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 509-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மோதல்!

இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பனீர் புலாவ்

ஆளுநரே ஒரு கொலுதான் : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel