டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மத்திய அமைச்சரவை கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (அக்டோபர் 11) டெல்லியில் நடைபெறுகிறது.

காவிரி ஒழுங்காற்று குழு!

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

நியூஸ் கிளிக் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அன்பெனும் பாடல் ரிலீஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் அன்பெனும் பாடல் இன்று வெளியாகிறது.

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு!

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தலைமை செயலக முற்றுகை போராட்டம்!

20 ஆண்டுகளாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்து மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் இன்று தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

இந்தியா, ஆப்கானிஸ்தான் மோதல்!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

ஈச்சம்பாடி அணை திறப்பு!

தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணை வலது, இடது புற வாய்க்கால்கள் பாசனத்திற்காக இன்று திறக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 508-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பிரெட் பனீர் ரோல்

வாழறதுக்கே வருத்தம் தெரிவிக்கிறாங்க: அப்டேட் குமாரு

 

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts