விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 10) கலந்துரையாடுகிறார்.
மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்!
தமிழக சட்டமன்றத்தில் கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
பாஜக மைய குழு கூட்டம்!
பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னையில் இன்று நடைபெறும் பாஜக மைய குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
தமிழ் மாநில காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம் திருமானூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அறப்போர் ஆய்வறிக்கை வெளியீடு!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளின் தரம் குறித்த ஆய்வறிக்கையை அறப்போர் இயக்கம் இன்று வெளியிடுகிறது.
ஜிவி பிரகாஷ் புதிய படம்!
கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் பெயரை கமல் ஹாசன் இன்று வெளியிடுகிறார்.
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்!
தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று முதல் அக்டோபர் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சிஐடியு ஆர்ப்பாட்டம்!
ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர் பணியிடங்களுக்கு டெண்டர் கோரியதை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
இங்கிலாந்து, வங்கதேசம் மோதல்!
இன்றைய ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 506-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மின் கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளில் கறுப்புக்கொடி!
கேட்குதா… கேட்குதா? அப்டேட் குமாரு
ODI Worldcup 2023: சுப்மன் கில் விளையாடுவாரா? பிசிசிஐ முக்கிய அறிவிப்பு