தூய்மை பணி இயக்கம்!
நாடு முழுவதும் இன்று (அக்டோபர் 1) காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒரு மணி நேரம் தூய்மை பணி இயக்கம் நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அடிக்கல் நாட்டு விழா!
பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானாவில் இன்று ரூ.13,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெறுகிறது.
ரஜினிகாந்த் 170 அப்டேட்!
டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது படத்தின் நடிகர், நடிகைகள் பற்றிய விபரங்கள் இன்று வெளியிடப்படும்.
செல்போனுக்கு தடை!
பழனி முருகன் கோவிலில் இன்று முதல் செல்போன், கேமரா கருவிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ முகாம்கள்!
தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் டெங்கு, மழைக்கால நோய்த்தடுப்புக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
கோஸ்ட் டீசர் வெளியீடு!
சிவராஜ்குமார் நடித்துள்ள கோஸ்ட் படத்தின் தமிழ் டீசரை இன்று நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்.
நேபாளம், மாலத்தீவு மோதல்!
ஆசிய விளையாட்டு போட்டிகள் கிரிக்கெட் போட்டியில் இன்று நேபாளம், மாலத்தீவு அணிகள் மோதுகின்றன.
வானிலை நிலவரம்!
தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 495-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: அடிக்கடி ஏப்பம் விடுபவரா நீங்கள்… தீர்வு என்ன?
மூணு மாசத்துல நாலு மேட்டர்: அப்டேட் குமாரு
ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா-பத்து மாநாட்டுக்கு சமம்: திராவிட மாத நிறைவுரையில் ஸ்டாலின்
ஆசிய போட்டிகள் 2023: 10 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலம், 4வது இடத்தில் இந்தியா!