பள்ளி கல்வித்துறை ஆய்வு கூட்டம்!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பள்ளி கல்வித்துறையின் ஆய்வு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (நவம்பர் 8) நடைபெறுகிறது.
திராவிடமே தமிழுக்கு அரண் கருத்தரங்கம்!
திராவிட இயக்க தமிழர் பேரவை நடத்தும் திராவிடமே தமிழுக்கு அரண் கருத்தரங்கம் சென்னை அடையாறு முத்தமிழ் பேரவையில் இன்று நடைபெறுகிறது. இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.
மேட்டுப்பாளையம் – ஊட்டி ரயில் சேவை!
பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட நீலகிரி மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான மலை ரயில் சேவை ஐந்து நாட்களுக்கு பின்பு இன்று மீண்டும் இயக்கப்படுகிறது.
முருகன் கோவில் திருக்கல்யாணம்!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் 7-ஆம் நாளான இன்று சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இட்லி கடை அப்டேட்!
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கனமழை அலர்ட்!
மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதல்!
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வேட்டையன் ஓடிடி ரிலீஸ்!
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.
கங்குவா வழக்கு!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தை தடை செய்யக்கோரி ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ராஜ்மா சாண்ட்விச்
இதுக்கெல்லாமா பிரேக்கிங் போடுவீங்க… அப்டேட் குமாரு
பியூட்டி டிப்ஸ்: ஆரோக்கியமான அழகிய நகங்களுக்கு…
ஹெல்த் டிப்ஸ்: மனநலத்தைக் காக்கும் மந்திரங்கள்!