டாப் 10 நியூஸ்: இன்று கரையைக் கடக்கும் ஃபெஞ்சல் புயல் முதல் டிஜிபி-க்கள் மாநாட்டில் மோடி வரை!

அரசியல்

இன்று கரையைக் கடக்கும் ஃபெஞ்சல் புயல்!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே இன்று (நவம்பர் 30) மாலை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குடியரசு தலைவர் நிகழ்ச்சி ரத்து!

ஃபெஞ்சல் புயல் காரணமாக, திருவாரூரில் இன்று மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதாக இருந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாநில டிஜிபிக்கள் மாநாடு!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்றும் நாளையும் நடைபெற உள்ள அனைத்து மாநில டிஜிபி-க்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் எச்சரிக்கை!

ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவை ரத்து!

ஃபெங்கல் புயல் காரணமாக, சென்னை ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் இன்று மதியத்திற்கு மேல் பேருந்து சேவைகள் இயங்காது என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் உதவித்தொகை!

அரசு பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை பெறுவதற்கான முதல்வர் திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் டிசம்பர் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பயிர் காப்பீடு!

தமிழகத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர்களை காப்பீடு செய்வதற்கான விண்ணப்பக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

மேற்கிந்திய தீவுகள் – வங்கதேசம் மோதல்!

மேற்கிந்திய தீவுகள், வங்கதேச அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல் விலையானது 10 பைசா குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரு.100.80-க்கும் ஒரு லிட்டர் டீசல் 10 பைசா குறைந்து ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: இறால் மோமோஸ்

குடியரசுத் தலைவரின் திருவாரூர் வருகை ரத்து!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *