தெலங்கானா தேர்தல்!
தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று (நவம்பர் 30) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
பணி நியமன ஆணை!
51 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி இன்று அரசு பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.
ஆம்புலன்ஸ் சேவை!
வயநாடு தொகுதியில் உள்ள மனன்தாவடி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவையை ராகுல் காந்தி இன்று துவக்கி வைக்கிறார்.
பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்!
செம்மண் குவாரி வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அண்ணாமலை நடைபயணம் ஒத்திவைப்பு!
கன மழை எச்சரிக்கை காரணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் நடைபயணம் இன்று முதல் டிசம்பர் 5-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கன மழை விடுமுறை!
கன மழை காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர் ஓய்வூதியம்!
முதியோர் ஓய்வூதியம் பெற்று வருவோர் வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 558-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜிம்பாப்வே, கென்யா மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே, கென்யா அணிகள் மோதுகின்றன.
வானிலை நிலரம்!
இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தொடர்ந்து பெய்யும் மழை… மேலும் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி செயலாளர் திடீர் மாற்றம்: தேர்வர்கள் அதிர்ச்சி!
செங்கல்பட்டு மட்டும் தக்காளி தொக்கா?: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்துக்கு என்னாச்சு? ஸ்டாலினுக்கு சென்ற சீக்ரெட் ரிப்போர்ட்!