டாப் 10 நியூஸ்: ரெட் அலர்ட் முதல் ‘சொர்க்கவாசல்’ படம் ரிலீஸ் வரை!

Published On:

| By Selvam

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் ஐந்தாவது நாள் அமர்வு இன்று (நவம்பர் 29) நடைபெறுகிறது. அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், கடந்த நான்கு நாட்களாக அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை.

வணிகர் சங்கம் கடையடைப்பு!

வணிக கட்டிடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறாமல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே நாளை (நவம்பர் 30) கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் புத்தக திருவிழா!

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் புத்தக திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று தொடங்கி வைக்கிறார்.

‘சொர்க்கவாசல்’ படம் ரிலீஸ்!

சித்தார்த் விஷ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்த ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

கனமழை விடுமுறை!

கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 92.49-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில், அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் நெல்லியாண்டவர் தொழில்நுட்ப வளாகத்தில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்!

உத்தரபிரதேசத்தில் ஷாஜி ஜாமா மசூதியில் ஆய்வு பணியின் போது ஏற்பட்ட வன்முறையில் ஐந்து பேர் உயிரிழந்ததைக் கண்டித்தும், வழிபாட்டுத்தல பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்!

பிரஷாந்த் நடித்த ‘அந்தகன்’, ஜெயம் ரவி நடித்த ‘பிரதர்’, கவின் நடித்த ‘ப்ளெடி ஃபெக்கர்’ ஆகிய படங்கள் இன்று அமேசான், ஜீ தமிழ் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெளியாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: இறால் கஞ்சி

அரசியல் சூப்பர் ஸ்டார் : சீமானுக்கு வானதி சீனிவாசன் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel