யோகா மாநாடு! top ten news today in Tamil November 29 2023
யோகாவின் ஒருங்கிணைப்பு – சிந்தனையை வெளிப்படுத்துதல் என்ற தலைப்பில் நடைபெற உள்ள தேசிய மாநாட்டை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (நவம்பர் 29) மகாராஷ்டிராவில் தொடங்கி வைக்கிறார்.
அண்ணாமலை நடைபயணம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வேதாரண்யம் முதல் திருத்துறைப்பூண்டி வரை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.
பழனி ரோப் கார் சேவை!
பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை இன்று இயங்காது.
கள்ளி பால்ல ஒரு டீ டிரைலர் ரிலீஸ்!
பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள கள்ளி பால்ல ஒரு டீ ஆந்தாலாஜி படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.
புறநகர் ரயில் ரத்து!
பொறியியல் வேலை மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் டிசம்பர் 14-ஆம் தேதி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இரவு நேர கடைசி மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
விஜயகுமார் திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக்!
G Squad நிறுவனத்தின் தயாரிப்பில் விஜயகுமார் நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.
சென்னை, கேரளா மோதல்!
இன்றைய ஐஎஸ்எல் கால்பந்து லீக் ஆட்டத்தில் சென்னை எப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 556-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா, கனடா மோதல்!
ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா, கனடா அணிகள் இன்று மோதுகின்றன.
வானிலை நிலவரம்! top ten news today in Tamil November 29 2023
தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…