ராணுவ வீரர்களுக்கு மரியாதை!
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில், போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (நவம்பர் 28) மரியாதை செலுத்துகிறார்.
ஹேமந்த் சோரன் பதவியேற்பு!
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
பிரியங்கா காந்தி பதவியேற்பு!
வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக பதவியேற்கிறார்.
வானிலை நிலவரம்!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
‘லைரானா’ பாடல் ரிலீஸ்!
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘லைரானா’ பாடல் இன்று வெளியாகிறது.
கார்த்திகை பிரம்மோற்சவம்!
ஆந்திர மாநிலம் திருச்சானூரில் உள்ள புகழ்பெற்ற பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, டிசம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சூர்யா 45 படப்பிடிப்பு!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45-வது படத்தின் படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று முதல் தொடங்குகிறது.
கனமழை விடுமுறை!
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் – ஜிம்பாப்வே மோதல்!
பாகிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே குயின்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.49-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…