கிறிஸ்துவ கூட்டமைப்பு மாநாடு!
கோவையில் இன்று (நவம்பர் 28) நடைபெறும் தமிழ்நாடு கிறிஸ்துவ கூட்டமைப்பு மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.
அண்ணாமலை நடைபயணம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பேராவூரணி முதல் பட்டுக்கோட்டை வரை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.
மணல் குவாரி வழக்கில் தீர்ப்பு!
சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
சேரி மொழி என விமர்சனம் செய்த நடிகை குஷ்புவுக்கு எதிராக அவரது வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
சித்தா ஓடிடி ரிலீஸ்!
அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.
மதுரை எய்ம்ஸ் வழக்கு!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 5 ஆண்டுகள் ஆகியும் தொடங்கப்படவில்லை என்று மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
வள்ளி மயில் டீசர் வெளியீடு!
சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த வள்ளி மயில் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
வங்கதேசம், நியூசிலாந்து மோதல்!
வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 556-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூ சீரகக் கஞ்சி
இன்னும் 3 மாதத்தில் திமுக கூட்டணி உடையும்: ஜெயக்குமார் உறுதி!