குடியரசு தலைவர் தமிழகம் வருகை!
நான்கு நாட்கள் பயணமாக தமிழகம் வரும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (நவம்பர் 27) கோவை வந்தடைகிறார். நவம்பர் 30-ஆம் தேதி திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.
உதயநிதி பிறந்தநாள்!
துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் அக்கட்சி நிர்வாகிகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவீரர் நாள்!
விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாவீரர் நாள் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை ஆர்ப்பாட்டம்!
பாமக நிறுவனர் ராமதாஸை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்ததைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் தீர்ப்பு!
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் விவாகரத்துக் கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
வானிலை நிலவரம்!
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை எச்சரிக்கை காரணமாக, கடலூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம், திருவாரூர்,விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.49-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நைஜீரியா – சிராலியான் மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் நைஜீரியா – சிராலியான் அணிகள் மோதுகின்றன.
பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!
கனமழை காரணமாக, இன்று நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: இறால் ஸ்ப்ரிங் ரோல்
அங்க மட்டும் கூட்டம் குறையல : அப்டேட் குமாரு
ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம்: இரவோடு இரவாக பறந்த ஏடிஜிபி உத்தரவு… பாமகவினர் கைது!