டாப் 10 நியூஸ்: உச்சநீதிமன்றத்தில் மோடி உரை முதல் டெல்டா மாவட்டங்களில் ரெட் அலர்ட் வரை!

Published On:

| By Selvam

உச்சநீதிமன்றத்தில் மோடி உரை!

இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் 75-ஆம் ஆண்டு தினத்தையொட்டி பிரதமர் மோடி இன்று (நவம்பர் 26) உச்சநீதிமன்றத்தில் உரையாற்றுகிறார்.

பாமக ஆர்ப்பாட்டம்!

பாமக நிறுவனர் ராமதாஸை முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்ததைக் கண்டித்து சேலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

உதயநிதி பிறந்தநாள் பாடல்!

துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் எழுதிய ‘தலைவனே இளம் தலைவனே’ என்ற பாடலை சென்னை அன்பகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிடுகிறார்.

தமிழர் எழுச்சி நாள் விழா!

மறைந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 70-ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று சென்னை அண்ணா நகரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழர் எழுச்சி நாள் விழா கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு!

சென்னை எழும்பூர் தொன் போஸ்கோ சீனியர் செகண்டரி பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் இன்று நடைபெறும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்கிறார்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 13 பைசா குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும் ஒரு லிட்டர் டீசல் 13 பைசா குறைந்து ரூ.92.48-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே – பாகிஸ்தான் மோதல்!

ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஜிம்பாப்வேயில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

விடுதலை 2 டிரைலர் ரிலீஸ்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை 2 படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இன்று வெளியாகிறது.

கனமழை விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ஸ்பைஸி இறால் புரொக்கோலி இட்லி உப்புமா

ஐபிஎல் ஏல பரிதாபங்கள் : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share