top ten news today in tamil november 26 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

மன் கி பாத்! top ten news today in Tamil November 26 2023

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று (நவம்பர் 26) நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.

திருப்பதி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் மேற்கொள்கிறார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் இன்று நடைபெறுகிறது.

கார்த்திகை மகா தீபம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2,668 அடி கார்த்திகை மகா தீபம் இன்று ஏற்றப்படுகிறது.

பாமக வாக்குச்சாவடி பணியாளர்கள் கூட்டம்!

பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பாமக வாக்குச்சாவடி பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

பிரபாகரன் பிறந்தநாள் விழா!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா சென்னை பல்லாவரம் அடுத்துள்ள பம்மல் எல்.சி திருமண மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா மோதல்!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்!

கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 553-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜிம்பாப்வே, உகாண்டா மோதல்! top ten news today in Tamil November 26 2023

இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே, உகாண்டா அணிகள் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உங்கள் தொகுதி கோயிலுக்குச் சென்று… தெலங்கானா காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு திடீர் உத்தரவு!

மணல் அதிபர்களுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

டிஜிட்டல் திண்ணை: டெல்லி தூது, -பாஜகவை உடைக்க உத்தரவிட்ட எடப்பாடி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *