டாப் 10 நியூஸ்: திமுக ஐடி விங் ஆலோசனை கூட்டம் முதல் டிட்டோஜாக் ஆர்ப்பாட்டம் வரை!

Published On:

| By Selvam

மோடி இந்தியா ரிட்டர்ன்!

அரசுமுறைப் பயணமாக நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி இன்று (நவம்பர் 21) இந்தியா திரும்புகிறார்.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்  வாக்குப்பதிவு சதவிகிதம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீதமுள்ள 31 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் மகாராஷ்டிராவில் 65%, ஜார்க்கண்டில் 68% வாக்குகள் பதிவாகியுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்!

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் ஷிண்டே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி வெற்றி பெறும் என்றும் ஜார்க்கண்டில் பாஜக வெற்றி பெறும் என்றும் பெரும்பாலான தேர்தல் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

டிட்டோஜாக் கண்டன ஆர்ப்பாட்டம்!

தஞ்சையில் அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர் ரமணி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மாலை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் முன்பாக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்!

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பீச் வாலிபால் போட்டி!

சென்னை மாமல்லபுரம் வடநெம்மேலியில் நடைபெற உள்ள சர்வதேச பீச் வாலிபால் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம்!

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில நிர்வாகிகள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி ராஜா தலைமையில் இன்று நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், திருவாரூர், நாகப்பட்டினம், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்பட்கிறது.

உலக மீனவர்கள் தினம்!

மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யவும் மீன்பிடி மேலாண்மையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் உலக மீனவர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: க்ரீம் ஆஃப் வெஜிடபிள் சூப்

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: ரேவதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share