டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

திருமண விழா!

திருக்கோவில்கள் சார்பில் நடத்தப்படும் 1100-வது திருமண விழாவை சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் மண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 24) நடத்தி வைக்கிறார்.

திருவாரூர் உள்ளூர் விடுமுறை!

முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி டிக்கெட் முன்பதிவு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று துவங்குகிறது.

மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு!

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

தி வில்லேஜ் இணைய தொடர்!

மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்த தி வில்லேஜ் இணைய தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.

கார்த்திகை தீப திருவிழா டிக்கெட் முன்பதிவு!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா டிக்கெட் முன்பதிவு இன்று துவங்குகிறது.

இன்று வெளியாகும் திரைப்படங்கள்!

சந்தானம் நடித்த பில்டப், ரியோ நடித்த ஜோ, விதார்த்,யோகிபாபு நடித்த குய்கோ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது.

நமீபியா, உகாண்டா மோதல்!

இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் நமீபியா, உகாண்டா அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 551-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மருந்துக்குழம்பு

’உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ : புதிய திட்டம் அறிமுகம்!