பெரியார் நினைவு நாள்!
தந்தை பெரியாரின் 50-வது நினைவு நாளான இன்று (டிசம்பர் 24) சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை!
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 36-வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மரியாதை செலுத்துகிறார்.
மெகா மருத்துவ முகாம்!
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 50 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
லவ்வர் டீசர் வெளியீடு!
பிரபு வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்த லவ்வர் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
சதுரகிரி பக்தர்கள் அனுமதி மறுப்பு!
கனமழை எச்சரிக்கை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் டிசம்பர் 27-ஆம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம்!
இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பொதிகை புத்தக திருவிழா!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை பொதிகை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 582-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 123 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புரோ கபடி போட்டி!
இன்றைய புரோ கபடி லீக் போட்டியில் யு மும்பா, பெங்கால் வாரியர்ஸ் அணிகளும், மற்றொரு போட்டியில் தெலங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகளும் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம் : பிரியங்கா விடுவிப்பு – தமிழ்நாட்டுக்கு யார்?