top ten news today in Tamil November 23 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

U Turn பாலம் திறப்பு! top ten news today in Tamil November 23 2023

சென்னை மத்திய‌ கைலாஷ் – இந்திரா நகர் இடையே கட்டப்பட்ட U Turn பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 23) திறந்து வைக்கிறார்.

நீதிபதிகள் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீதிபதிகள் விவேக் குமார் சிங், சுதிர் குமார் ஆகியோர் இன்று பதவியேற்கின்றனர்.

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்!

காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

மன்சூர் அலிகானுக்கு சம்மன்!

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மன்சூர் அலிகான் பேசிய நிலையில் விசாரணைக்கு இன்று ஆஜராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா மோதல்!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 550-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அனிமல் டிரைலர் ரிலீஸ்!

சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

விஜய் மக்கள் இயக்கம் நூலகம்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக திருப்பூரில் இன்று நூலகம் திறக்கப்படுகிறது.

கனமழை விடுமுறை!

கனமழை காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிமடா ரிலீஸ்! top ten news today in Tamil November 23 2023

ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள புலிமடா திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: வெஜ் ஜல்ஃப்ரைசி

சேரி மொழி: குஷ்பூவின் விளக்கமும்… குவியும் கண்டங்களும்!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் விசாரணைக்கு அனுமதி மறுப்பு… பின்னணியில் அண்ணாமலை: ஜோதிமணி சந்தேகம்!

OPEN AI-க்கு திரும்பிய ஆல்ட்மேன்… ஐந்து நாளில் நடந்த அதிரடி திருப்பம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *