பழங்குடியினர் விழா! top ten news today in Tamil November 22 2023
15-வது தேசிய பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற வார விழாவை சென்னை அடையாறு அரசினர் இளைஞர் விடுதி திறந்தவெளி அரங்கத்தில் ஆளுநர் ரவி இன்று (நவம்பர் 22) துவக்கி வைக்கிறார்.
பாமக ஆர்ப்பாட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தீ குச்சி வீடியோ பாடல் வெளியீடு!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா டபுள் X திரைப்படத்தின் தீ குச்சி வீடியோ பாடல் இன்று வெளியாகிறது.
கேப்டன் மில்லர் பாடல் வெளியீடு!
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகிறது.
கள்ளழகர் கோவில் கும்பாபிஷேகம்!
மதுரை கள்ளழகர் திருக்கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.
கல்வி கடன் முகாம்!
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் இன்று கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
சம்பா பயிர் காப்பீடு!
விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவசாகம் இன்றுடன் நிறைவடைகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 550-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள், மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜிம்பாப்வே, நமீபியா மோதல்! top ten news today in Tamil November 22 2023
ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே, நமீபியா அணிகள் இன்று மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மங்களூர் மொச்சை கிரேவி
சேலம் மாநாட்டின் மிகப் பெரிய பலம் நேருதான்: உதயநிதி ஓப்பன் டாக்!
குடிநீர் தொட்டியில் மலம்..? ‘காக்கா தான் காரணம்’ : ஆட்சியர் விளக்கம்!
வந்தாச்சு இ-மெயில் வெரிபிகேஷன் முறை…. அறிமுகப்படுத்தியது வாட்ஸ்ஆப்!