அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! top ten news today in Tamil November 21 2023
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (நவம்பர் 21) நடைபெறுகிறது.
உலக மீனவர் நாள் விழா!
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்கள் இணைந்து நடத்தும் உலக மீனவர் நாள் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று கலந்து கொள்கிறார்.
அரசு மருத்துவ கல்லூரி திறப்பு விழா!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேவையை துவக்கி வைக்கிறார்.
கோவை குற்றாலம் அருவி!
வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்படுகிறது.
தெலங்கானா தேர்தல் பிரச்சாரம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தெலங்கானா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
கலை திருவிழா போட்டி!
அரசு பள்ளி மாணவர்களுக்கான 2023 – 24 மாநில அளவிலான கலை திருவிழா போட்டி இன்று முதல் நவம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சேலம் புத்தக திருவிழா!
சேலத்தில் இன்று முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெறுகிறது.
இந்தோனேசியா, கம்போடியா அணிகள் மோதல்!
ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தோனேசியா, கம்போடியா அணிகள் இன்று மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 549 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. top ten news today in Tamil November 21 2023
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மட்டர் பனீர்
”ஆளுநர் மீதான வழக்கில் பின்வாங்க மாட்டோம்”: அமைச்சர் ரகுபதி உறுதி!