மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று (நவம்பர் 20) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீதமுள்ள 38 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்!
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தீர்ப்பு!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
பழனி ரோப் கார் சேவை!
பராமரிப்பு பணிகள் காரணமாக, நிறுத்திவைக்கப்பட்டிருந்த பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை 42 நாட்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
கோவா திரைப்பட விழா!
55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
வானிலை நிலவரம்!
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கனமழை விடுமுறை!
கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து – கம்போடியா மோதல்!
இன்று நடைபெறும் ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து – கம்போடியா அணிகள் மோதுகின்றன.
சூது கவ்வும் 2 முக்கிய அப்டேட்!
எஸ்.ஜே.அருண் இயக்கத்தில் சிவா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…