டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பள்ளிகள் திறப்பு! top ten news today in Tamil November 20 2023
டெல்லியில் காற்று மாசு குறைந்ததால் இன்று (நவம்பர் 20) முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
ஆளுநர் ரவி வழக்கு!
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ரவி காலதாமதம் செய்து வருவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை!
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக ஆலோசனை கூட்டம்!
சேலத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்பபிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சபரிமலை கோவில் முன்பதிவு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெறும் மண்டல பூஜை தரிசனத்திற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.
கல்வி கடன் முகாம்!
கடலூர் மாவட்டத்தில் இன்று மாணவர்களுக்கான கல்வி கடனுதவி வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி!
பொதுமக்கள் பார்வைக்காக முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது.
கோவா சர்வதேச திரைப்பட விழா!
54-வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் இன்று முதல் நவம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 548-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். top ten news today in Tamil November 20 2023
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஷக்கர்கந்தி (சர்க்கரைவள்ளிக் கிழங்கு) சாட்
ஆஸ்திரேலியா சாம்பியன்: மோடி, ராகுல், ஸ்டாலின் வாழ்த்து!
INDvsAUS : இறுதிப்போட்டியில் தோல்வி ஏன்?: ரோகித் சர்மா பேட்டி!
INDvsAUS Final: சொன்னதை செய்த கம்மின்ஸ்… 6வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!