சுற்றுலா விருது வழங்கும் நிகழ்ச்சி!
சுற்றுலா தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி உள்ளிட்ட 17 வகையான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (நவம்பர் 19) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகள் வழங்கி கெளரவிக்கிறார்.
இந்திரா காந்தி பிறந்தநாள்!
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கும், சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மரியாதை செலுத்தப்படுகிறது.
ஜிசாட் N2 செயற்கைக்கோள்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்துள்ள ஜிசாட் N2 அதிநவீன செயற்கைக்கோள் அமெரிக்காவில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
பாரம்பரிய சுற்றுலா தினம்!
பாரம்பரிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று கட்டணமின்றி இலவசமாக சுற்றிப்பார்க்கலாம்.
வானிலை நிலவரம்!
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சர்வதேச ஆண்கள் தினம்!
ஆண்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில் சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கை, நியூசிலாந்து மோதல்!
இலங்கை பல்லேக்கல் மைதானத்தில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
தி ஸ்மைல் மேன் டீசர் ரிலீஸ்!
ஸ்யாம் பிரவீன் இயக்கத்தில் சரத்குமார் நடித்துள்ள ‘தி ஸ்மைல் மேன்’ படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
கனமழை விடுமுறை!
கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று அம்மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் விடுமுறை அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…