ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி
நைஜீரியா நாட்டில் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, பிரேசிலில் இன்று (நவம்பர் 18) நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
நிதிக்குழு உறுப்பினர்களை சந்திக்கும் ஸ்டாலின்
நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்துள்ள நிதிக்குழு உறுப்பினர்கள், முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
தேர்தல் பிரச்சாரம் ஓய்வு!
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.
71-வது கூட்டுறவு வார விழா!
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெறும் 71-வது கூட்டுறவு வார விழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அணை திறப்பு!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பிளவக்கல் அணை மற்றும் ராஜபாளையம் சாஸ்தா கோவில் அணைகளில் இருந்து இன்று முதல் பாசன வசதிக்காக நீர் திறக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நயன்தாரா புதிய படம்!
டிரம்ஸ்டிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.
வானிலை நிலவரம்!
மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வ.உ.சிதரம்பரனார் நினைவு நாள்!
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதரம்பரனார் நினைவு நாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 10 பைசா குறைந்து ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் 0.09 பைசா குறைந்து ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்!
ஆஸ்திரேலியாவில் உள்ள நின்ஜா மைதானத்தில் இன்று நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…