டாப் 10 நியூஸ்: சென்னை பீச் டூ தாம்பரம் ரயில் ரத்து முதல் ‘புஷ்பா 2’ டிரெய்லர் வரை!

Published On:

| By Selvam

மோடி நைஜீரியா பயணம்!

அரசுமுறை பயணமாக நைஜீரியா நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி இன்று (நவம்பர் 17) அந்நாட்டின் அதிபர் போலோ அகமது தினுபுவை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார்.

கஸ்தூரி கைது!

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் நேற்று (நவம்பர் 16) கைது செய்யப்பட்டார். இன்று சென்னை அழைத்து வரப்பட்டு நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்படுகிறார்.

 சென்னை பீச் – தாம்பரம் ரயில் சேவை ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று‌ காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தாம்பரம் – சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லாவரம் – சென்னை கடற்கரை இடையே ரயில் சேவை இயக்கப்படும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.

விடுதலை 2 பாடல் ரிலீஸ்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை 2 படத்தில் இடம்பெற்றுள்ள ‘தினம் தினமும்’ பாடல் இன்று வெளியாகிறது.  இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

புஷ்பா 2 டிரெய்லர் ரிலீஸ்!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.

சர்வதேச மாணவர் தினம்!

கல்வியின் மதிப்பை மாணவர்களுக்கு வலியுறுத்தும் வகையில் சர்வதேச மாணவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.48-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.

இலங்கை – நியூசிலாந்து மோதல்!

இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள பல்லேகெல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: பிரியாணியும் வேண்டும், எடையும் அதிகரிக்கக் கூடாது… இதோ வழி!

போதும் இத்தோட நிறுத்திக்கலாம்: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share